கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணைப்படி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் அவர்களின் வழிகாட்டுதலில் மாவட்ட பூச்சிகள் வல்லுநர் முத்துமாரியப்பன் அவர்களின் அறிவுரைதல் படி, சூளகிரி வட்டாரத்தில் டெங்கு பாதிப்புக்குள்ளான கிராமங்களான பீர்ஜெபள்ளி அஞ்சனகிரி இன்று கொசுக்களை ஒழிக்கும் பணி மாவட்ட நல்ல கல்வியாளர் சப்த மோகன் மேற்பார்வையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாமணி அவர்களின் துணையுடன் தீவிரமாக நடைபெற்றது ஒவ்வொரு வீடாகச் சென்று கொசு மருந்து தெளித்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்தனர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் கொசு புகை அடித்தனர்.
மேலும் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சல் பரவுதலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர், இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.