தர்மபுரி- கள்ளக்குறிச்சி மாவட்டம் எல்லை பகுதியில் அரூர் சப் டிவிஷன் கோட்டப்பட்டி போலீசார் எல்லைப்பகுதியில் சேலூர் அம்மாபாளையம் பிரிவு சாலையில் நேற்று முன்தினம் கழுத்து மற்றும் முகப் பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சடலத்தை மீட்டு, இது தொடர்பாக அரூர் டிஎஸ்பி பெனாசீர்பார்த்திமா தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சேலம் மாவட்டம், கூட்டாத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியண்ணண் மகன் பாபு (எ) பாபுராஜ் என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே காரியபட்டி போலீஸ் ஸ்டேஷனில் கொலை வழக்குப்பதிவு செய்து சிறை சென்றவர் என்பது தெரியவந்தது. தகவலறிந்த, தர்மபுரி மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் நேற்று அரூர் டிஎஸ்பி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டார். தற்பொழுது தமிழகத்தில் ரவுடிகளை என்கவுண்டர் நடைபெற்றுவரும் இந்நிலையில் இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.