கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் ஏழைகள் இருக்கிறார்கள் இங்கு கல்லுடைக்கும் தொழிலாளர்கள் கடந்த 30 ஆண்டு காலமாக ஏழைகளாக வாழ்ந்து வருகிறார்கள், இவர்களுக்கு அரசு இலவச பட்டா வழங்க வேண்டும் மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களில் அதிக அளவில் உணவு வீணாக்கபடுகிறது இந்த உணவுகளை ஏழை எளியோருக்கு வழங்கிட வேண்டும், மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி நகரத்தில் அதிக அளவில் உணவு பொருளான ரேஷன் அரிசி கள்ள மார்க்கெட் வியாபாரிகள் கடத்தி விற்பனை செய்கிறார்கள் இவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் நுகர்வோர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் பிரகாஷ் மாவட்ட இளைஞரணி தலைவர் ஆகாஷ் மகளிர் அணி தலைவி குமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.