தர்மபுரி மாவட்டம் அரூரில் பாமக செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது 10.5% இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
பள்ளி திறப்பதற்கு முன்பே அனைத்து கிராம பகுதிகளுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் அரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநில வன்னியர் சங்க செயலாளர் இரா.அரசாங்கம், மாவட்ட செயலாளர் பிவி.செந்தில், மாவட்ட துணை தலைவர் அன்னை முருகேசன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் வேலு, ஒன்றியக்குழு துணைத்தலைவர் வன்னிய பெருமாள் அல்லிமுத்து, முன்னாள் ஒன்றிய செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், குமரேசன், செந்தில், சேகர், திருமால், நெடுஞ்செழியன், நகர செயலாளர் பெருமாள் தண்டபாணி, வெங்கடேசன், அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.