அரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு இன்று காலை 11-45மணியளவில் அரூர் அருகே உள்ள நேதாஜி நகரில்வசிக்கும் கவியரசன் த/ பெ. கந்தசாமி என்பவரது வீட்டு தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் நாயொன்று சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் அரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் மா. பழனிசாமி அவர்கள் தலைமையில் குழுவினருடன் நீர்த்தாங்கி வண்டியின் மூலம் விரைந்து சென்று கம்பி வேலியில் மாட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாய் ஒன்று லாவகமாக செயல்பட்டு உயிருடன் மீட்கப்பட்டது.பின் உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.