கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி ஊராட்சியில் பங்களா தெருவில் நூலகம் முதல் சூளகிரி சந்திப்பு சாலை வரை சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
15 ஆவது நிதிகுழு மானியத்தில் இருந்து 200 மீட்டர் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது . குப்பைகளாலும் சாக்கடையால் சூழப்பட்ட இருந்த பங்களா தெரு தற்போது உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லக்ஷ்மிகாந்த் அவர்களின் முயற்சியால் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
உத்தனப்பள்ளி ஊராட்சியில் பல நலத்திட்ட பணிகளை செய்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் லக்ஷ்மிகாந்தை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்