பின்னர், தன்னை நூலகத்தின் கொடையாளராக பத்தாயிரம் ரூபாய் செலுத்தி இணைத்துக் கொண்டார். நூலகத்தை துய்மையாக பராமரிக்கவும், கூடுதல் கட்டிடங்கள், பழுதான கட்டட அறைகளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கூடுதல் கழிவறை கட்டிட வசதி, குரூப் தேர்வு எழுதும் நூலக வாசகர்களுக்கு தேவையான கல்வி பாட புத்தகங்கள், தினசரி கூடுதல் நாளேடுகள், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் கிராமப்புற நூலகங்களுக்கு கூடுதல் புத்தகங்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா. பாலகிருஷ்ணன், சமூக நீதிப் பேரவை மாநிலத் துணைப் பொது செயலாளர் வேல்முருகன் நகர செயலாளர் வெங்கடேசன் ஒன்றிய செயலாளர் அறிவு, நகர அமைப்பு செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.