பெட்ரோல், டீசல், கேஸ் விலையை கட்டுப்படுத்த கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டானாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் சூளகிரி பேருந்து நிலையம் முதல் சூளகிரி பேரிகை சாலை வரை இரண்டு சக்கர வாகனங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகளை ஏந்தியவாறு தங்களது கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சிபிஐ மாவட்ட விவசாய செயலாளரும் சூளகிரி ஒன்றிய செயலாளருமான வெங்கடாசலம் , விவசாய ஒன்றியம் ரங்கநாதன்,துணை தலைவர் சாபிர், மாவட்ட சிபிஐ கமிட்டி ராஜா, பேரிகை பொறுப்பாளர் வெங்கடராஜ்,இளைஞர் பெருமன்றம் ஸ்ரீராம், விவசாய சங்க ஒன்றிய சினிவாசரெட்டி மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்களும் , நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.