பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட் டத்திற்கு டிஎன்பிஎஸ்ஏ ஒன்றிய தலைவர் எம்.சக்திவேல் தலைமை தாங்கினார், டிஎன்பிஎஸ் ஏ ஒன்றிய செயலாளர், சண்முகம் டி என்ஜிஓடிஎஸ் ஒன்றிய தலைவர் மாதேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓஎச்டி டிவி தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர் சங்கத்தின் மாநில தலைவர் தர்மபுரி கே கிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் வேட்ராயன், மாவட்ட துணை செயலாளர் மோகன்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் முருகன், சுரேஷ், சரவணன், சுமதி, மாதேஷ், விஜயா, முனியம்மாள் சண்முகம் ராஜகுமாரன், சண்முகம் ராஜவேல், குமரன், சங்கீதா, ராமசாமி, ரங்கநாதன், செல்வராஜ், ரஜினிகாந்த், ராமகிருஷ்ணன், பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு இனிவரும் காலங்களில் ஊராட்சி செயலாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை 10 ஆயிரமாக உயர்த்தி, அத் தொகையை அரசு கருவூலத்தில் வழங்கிட வேண்டும், ஊரக வளர்ச்சி துறையில் தற்போது அரசியல் அழுத்தங்கள் மிக அதிகமாக உள்ளன எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் உட்பட 15க்கும் மேற்பட்ட கோரிக்கை வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர் இறுதியில் உறுப்பினர் செல்வி நன்றியுரை நிகழ்த்தினார்.
- செய்தியாளர் இர்பான்.