இதுகுறித்து அப்பகுதி விவசாயி மணியிடம் கேட்டபோது நான் 8 ஆண்டாக மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகிறேன் வருவாயும் தந்தது. ஒரு செடியில்10 கதிர்கள் விளையும். இந்த ஆண்டும் அதே போல் கடையில் மக்காச்சோளம் விதை வாங்கி நடவு செய்தேன். 75 நாட்களுக்குப் பிறகு செடி வளர்ச்சி அடையவில்லை. ஒரு செடியில் மூன்று கதிர் மட்டுமே வளர்ந்துள்ளது. கதிரை உரித்துப் பார்த்தால் கொட்டையும், தரமானதாக இல்லை. மேலும் பூச்சி தாக்குதலும் உள்ளது.பூச்சி தாக்குதலை தடுக்க மருந்து தெளித்து பயனில்லை இதனால் ரூ. 25 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தான் தெரிந்தது தரமற்ற மக்கச்சோள விதை என்பது என அவர் தெரிவித்தார்.
மற்றொரு விவசாயி சின்ராஜி கூறுகையில் ஓசூர் விதை கம்பெனிக்காரர்கள் மக்காச்சோள விதை கொடுத்தார்கள்.3 மாதத்தில் நல்ல மகசூல் தரும் என்று சொல்லி கம்பெனி மூலமாகவே அறுவடை செய்து டன் ரூ. 6 ஆயிரத்திற்கு நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு சென்றனர். தற்பொழுது அறுவடை பருவத்தில் கதிரை உரித்துப் பார்த்தாள் கொட்டை வளர்ச்சி அடையவில்லை இதனால் ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நஷ்டம் என்றார்.பெண் விவசாயி வசந்தா கூறுகையில் வட்டிக்கு கடன் வாங்கி மக்காச்சோளம் சாகுபடி செய்து ஏமாந்து விட்டேம். மக்காச்சோளம் அறுவடை செய்யாமலேயே நிலத்தில் மாடுகளை விட்டு மேய்ந்து வருகிறேன். நஷ்டத்தை ஈடுகட்ட அரசு உதவ வேண்டும் என அவர் தெரிவித்தார்.