Type Here to Get Search Results !

தருமபுரி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி-2021-க்கான சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா.

இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935-ல் தொடங்கப்பட்டு அப்பொழுது முதல் 86 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும், தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குதற்பொருட்டும், பொதுமக்கள் அதிக அளவில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை பொருட்களை வாங்கி பயன்பெறும் வகையிலும், விழா காலங்களில் 30% வரை சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.

இந்தாண்டு தீபாவளிக்கான புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டுப் புடவைகள், புதிய  வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. மேலும் கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் ஆர்கானிக் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டேபுள் மேட், ஸ்கிரின் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி இரகங்ளுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை கோ-ஆப்டெக்ஸில் வாங்கி நெசவாளர்களுக்கு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

தீபாவளி 2021 பண்டிகைக்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 2 விற்பனை நிலையங்களுக்கு ரூ.310.00 இலட்சங்கள் (ரூ. 3.10 கோடி) விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, கோ-ஆப்டெக்ஸ் கனவு நனவு திட்டம் மாதாந்திர தவணைத் திட்டத்தில் கூடுதல் பலன் உள்ளதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கனவு நனவு திட்டத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனர். 

அனைத்து வாடிக்கையாளர்களும் கோ ஆப்டெக்ஸின் கனவு நனவு திட்டம் மாதாந்திர தவணைத் திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்து  பயன்பெறலாம், தீபாவளி 2021 சிறப்பு சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த  நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30% வரையிலான தள்ளுபடி வழங்குகிறது.

தற்போது தருமபுரி, கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி விற்பனை நிலையம் கடை எண்.11, நாச்சியப்பா கவுண்டர் தெரு, தருமபுரி -636701.தொலைபேசி எண். 04342-260145 இயங்கி கொண்டு இருக்கின்றது.

தீபாவளி 2021 சிறப்பு தள்ளுபடி துவக்க விழாவினை கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி பட்டு மாளிகை தருமபுரி விற்பனை நிலைத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று (20.10.2021) குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள். கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் அ.கோபால் அவர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884