கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமில் தருமபுரி நகராட்சி உடன் இணைந்து 33 வார்டிலும் மை தருமபுரி தன்னார்வலர்கள் தன்னார்வலப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மே மாதம் முதல் கோவிட் தடுப்பூசி போடும் பணி இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு கலைக்கல்லூரியில் மை தருமபுரி சார்பாக தடுப்பூசி முகாமில் தன்னார்வ பணியை கடந்த ஐந்து மாதமாக செய்து வருகின்றனர், இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி யிலும் மற்றும் நகராட்சியில் உள்ள 33 வார்ட்டுகளிலும் நகராட்சி அலுவலர் திரு.சுசீந்திரன் அவர்களின் உதவியுடன் மை தருமபுரி தன்னார்வலர்கள் தன்னார்வலப் பணியை செய்து வருகின்றனர். இதில் மை தருமபுரி உறுப்பினர்கள் தமிழ்செல்வன், கோகுல்ராஜ், அருணாச்சலம், ராகவன், தியாகவேந்தன், லெனின், தாரணி, நிவேதா, கவிப்ரியா, சௌமியா மற்றும் மை தருமபுரி தன்னார்வலர்கள் பணி செய்து வருகின்றனர்.