வலைசகவுண்டனூர் ஊராட்சியில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் அரிமா எஸ். ஜெயவேல் துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் வலைசகவுண்டனூர் ஊராட்சியில் உள்ள ஜிம்மாண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் இலவச தடுப்பூசி முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் அரிமா எஸ். ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் அரிமா ஜெயவேல் இரண்டாம் டோஸ் செலுத்திக் கொண்டார்.
துணைத் தலைவர் ரமணா சின்னதம்பி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பார்த்திபன், அரியப்பன், வெங்கடாசலம், ஆசிரியர் பரத், கிராம செவிலியர் ஜெயா, ஊராட்சி செயலாளர் ரஞ்சித் குமார் உள்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து முதல் டோஸ், இரண்டாம் டோஸ் செலுத்தி கொண்டனர்.