தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்தில் 34 பஞ்சாயத்தில் தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து இந்த கிராமங்களுக்கு பஸ்ஸில் செல்லும்போது சுமார் 2 கிலோமீட்டர் பைபாஸ் சாலையை சுற்றி போக வேண்டும். பஸ்ஸை தவற விட்ட பயணிகள் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் 15வது வார்டு வழியாக அமைந்துள்ள குறுக்கு போக்குவரத்து சாலையில் நடந்து சென்று தவறவிட்ட பஸ்ஸை பிடித்து அவர்கள் கிராமத்துக்கு சென்ற அடைவார்கள்.
இந்த 15வது வார்டு சாலையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பைக், கார் மூலம் சொந்த கிராமத்திற்கு செல்வதற்க்கு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த முக்கிய சாலையில் ஆபத்தான வளைவு பகுதியில் அமைந்துள்ள மின் கம்பத்தின் அடிபாகம் பழுதடைந்து கம்பி மட்டுமே காணப்படுகிறது. எப்பொழுது விழுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளனர். மேலும் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை நடுவே இந்த மின் கம்பம் அமைந்துள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன்பு கபத்தை அகற்றி சாலையோரத்தில் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு வைத்துள்ளனர்.