தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே பையர்நாயக்கன்பட்டி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் நேற்று அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் முகாம் மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் மோகன்சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் தற்பொழுது பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையில் தங்கள் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பது குறித்தும்,மேலும் தரிசு நிலங்கள் உள்ள பகுதியின் சிறிய நீர் தேக்க அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு இருந்தாள் தடுப்பணை கட்டிக் கொடுப்பது, ஆழ்துளை கிணறு அமைத்து தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றுவது, சொட்டு நீர் பாசனத்தில் முக்கியத்துவம், சோலார் மின் வசதி அமைத்து மின் மோட்டார் இயக்குவது, கால்நடை வளர்ப்பை அதிகரிப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் அட்மா திட்ட தொழில் மேலாளர் சண்முகம் உள்ளிட்ட விவசாயத் துறையை சாரந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.