சென்னை கோவை ரயில்வே வழித்தடத்தில் அமைந்துள்ளது புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தை மணியம்பாடி, ஒசஹள்ளி, நல்லகுட்லஹள்ளி, கடத்தூர், லிங்கநாய்கனஹள்ளி, மடதஹள்ளி, வெங்கடதாரஹள்ளி, புளியம்பட்டி, சுங்கரஹள்ளி, மோட்டாங்குறிச்சி உள்பட்ட 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப் பகுதியிலுள்ள விவசாயிகள் சென்னை, கோவை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தொலைதூர நகரங்களுக்கு சாமந்தி, செண்டுமல்லி, மல்லிகை உள்ளிட்ட பூக்கள், காய்கறிகளை எடுத்துச் செல்ல புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
அதேபோல், கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் ஏற்காடு விரைவு ரயிலை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், கரோனா பொதுமுடக்க நேரத்தில் புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையத்தில் ஏற்காடு விரைவு ரயில் நின்று செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கரோனா தாக்கம் குறைந்த நிலையிலும், ஏற்காடு விரைவு ரயில் புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. இதனால், பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, சென்னை கோவை ரயில்வே வழித்தடத்தில் உள்ள புட்டிரெட்டிப்பட்டியில் ஏற்காடு விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்