ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ்.கே.கோவிந்தன், வி.ஆறுமுகம், சி.பழணி, ஆர்.பாரதிதாசன், எஸ்.தனலட்சுமி, டி.வேடியப்பன், எஸ்.சுமதி, ஆர்.செந்தில்குமார் ஆகியோர் தீர்மானத்தை முன்மொழிந்தனர். மாநிலசெயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் நிறைவுறையாற்றினார்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 12 பேர் கொண்ட ஒன்றிய குழுவிற்கு ஒன்றிய செயலாளராக பி.குமார் தேர்வு செய்யப்பட்டார். செனாக்கல் அனைகட்டு திட்டத்தை நிறைவேற்றவேண்டும். வேளாண் சார்பு தொழிற்சாலை அமைக்கவேண்டும். வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச மனைபட்டா வழங்கவேண்டும். நீண்ட ஆண்டுகாலமாக சாகுபடி செய்துவரும் விவசாய நிலங்களுக்கு மனைபட்டா வழங்கவேண்டும், தமிழகத்தில் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இருந்தபோதிலும் கொரோனா அபாயம் நீடிக்கிறது. மாவட்ட, வட்டார, கிராமப்பற அரசு மருத்துவமனைகள் போதுமான வசதிகள் ஏற்படுத்த வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அதற்காக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் மகன் காரை ஏற்றி கொலை செய்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலசெயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேசினார்.
வள்ளிமதுரை அனைகட்டு கால்வாய் பொன்னேரி ஏரியிடன் இணைக்க வேண்டும். காவேரி உபரிநீரை அனைத்து ஏரிகளுக்கும் நிரப்பவேண்டும். மலைவாழ் மக்கள் அனுபவத்தில் இருக்கும் நிலங்களுக்கு வன உரிமை சட்டத்தின் படி பட்டா வழங்கவேண்டும். அரூர் நகருக்கு அருகாமையில் உள்ள கொளகம்பட்டி பஞ்சாயத்தை பாப்பிரெட்பட்டி ஒன்றியத்தில் இருந்து நீக்கி அரூர் ஒன்றியத்தில் இணைக்க வேண்டும்.
அரூர் பேரூராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தில் வேலை வழங்கவேண்டும். சித்தேரி, சிட்லிங் மலைப் பகுதிகளை உள்ளடக்கி தீர்த்தமலை தனி ஒன்றியமாக அறிவிக்கவேண்டும். அரூரில் சே கோ ஆலை நிறுவ வேண்டும். அரூர் அரசு கலைகல்லூரிக்கு அரசு நல மாணவர் மாணிவியர் விடுதி அமைக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, இறுதியாக சிங்காரம் நன்றி கூறினார்.