தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து கே ஈச்சம்பாடியில் தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் சார்பில் 2019 ஆம் ஆண்டு மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர், பொம்மிடி சுற்றியுள்ள ஏரிகளின் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரி கே.ஈச்சம்பாடி அணைகட்டில் இருந்து உபரி நீரை மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர் மற்றும் பொம்மிடி சுற்றியுள்ள ஏரிகளுக்கு நிரப்பினால் விவசாயிகள் பயனடைவார்கள், இந்த திட்டத்தில் ஏரிகளுக்கு மின் மோட்டார் மூலம் பாசன வசதி செய்வதாக அறிவிக்கப்பட்டது, இந்த திட்டத்தை பற்றிய விவர பலகைகள் மட்டும் வைத்துள்ளனர்.
இது வெறும் அறிக்கையோடு மட்டும் நின்றுவிடாமல் செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் சுமார் 80க்கும் மேல் கிராம விவசாயிகள் பயனடைவார்கள், இப்போது பருவமழை பெய்யும் நிலையில் நீரை சேமித்து வைத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் குடிப்பதற்கும் விவசாயம் செய்வதற்கும் பயன்படும் என சமூக ஆர்வலர்களும், கிராம மக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்