தருமபுரி மாவட்டம் அருர் வட்டம் மொரப்பூர் ஒன்றிய முதல் மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. மாநாட்டில் தென்பெண்ணை ஆற்றுநீரை மொரப்பூர் பகுதி ஏரியில் நிரப்பிடவும், சென்னகால் அணைகட்டு திட்டம் நிறைவேற்றிடவும், மொரப்பூர் - தருமபுரி ரயில் இணைப்பு பாதையை விரைவில் நிறைவேற்றகோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் Ex.சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு, மாவட்ட செயலாளர் குமார், நிர்வாகிகள் ஜோதி, வேலாயூதம் தாமரை, முத்து, தங்கராசு, ராமன், இராமகிருஷ்ணன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.