1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வங்கி சார்பில் வருகின்ற நவம்பர் 11, அன்று 100-வது நிறுவனர் தினம் கொண்டாடப்பட உள்ளது, இந்த தினத்தை முன்னிட்டு, தேசிய அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை இவ்வங்கி அறிவித்திருந்தது.
5 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும், போட்டிகள் பல்வேறு நிலைகளில் இறுதி செய்யப்பட்டு தேசிய அளவில் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்போட்டிகள் முதல் கட்டமாக தருமபுரி மாவட்டத்தில் அக்டோபர் 28 அன்று நடத்தப்பட்டது, கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில் நடந்த இப்போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை பொம்மிடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளை மேலாளர் திரு.கே. உதயகுமார் மற்றும் வங்கி ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.