தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர வாழ்வாதார இயக்கத்தின் மூலம் அமைக்கப்பெற்ற மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக பதிவு செய்து உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் குழுக்களின் மூலமாகவோ (அல்லது) தங்களது குழுவில் உள்ள ஏதேனும் உறுப்பினர்கள் மூலமாகவோ உற்பத்தி பொருட்கள் தயார் செய்து கொண்டு இருப்பின் கீழ்கண்ட விவரங்களுடன் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- மகளிர் சுய உதவிக்குழுவின் தீர்மான நகல்,
- மகளிர் குழு/ மகளிர் குழு உறுப்பினர் உற்பத்தி செய்யும் பொருட்களின் மாதிரி,
- உற்பத்தியாளரின் ஆதார் அட்டை,
- உற்பத்தி பொருள் குறித்த ஏதேனும் பதிவு செய்யப்பட்டிருப்பின் அப்பதிவு சான்று.
- உற்பத்தி மற்றும் விற்பனை செலவின மற்றும் விலை நிர்ணயம் குறித்த விவரம்.
எனவே, மேற்கண்ட தகவலுடன் திட்ட இயக்குநர். மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம். இரண்டாம் தளம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி -636 705 என்ற முகவரியில் தங்களது தகவல்களை பதிவு
செய்துக்கொண்டு மகளிர் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி தரப்படும் விற்பனை வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களது விற்பனையை பெருக்கி வாழ்வாதார மேம்பாடு அடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் DSMS/ உதவி திட்ட அலுவலர்(FI) கைபேசி எண். 9444094121-ல் தொடர்பு கொள்ளலாம்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் குழுக்களின் மூலமாகவோ (அல்லது) உறுப்பினர்கள் மூலமாகவோ உற்பத்தி பொருட்கள் தயார் செய்து கொண்டு இருப்பின் தங்களது தகவல்களை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் பதிவு செய்துக்கொண்டு, மகளிர் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி தரப்படும் விற்பனை வாய்ப்புகளை பயன்படுத்தி, தங்களது விற்பனையை பெருக்கி, வாழ்வாதார மேம்பாடு அடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.