ஏரியூர் சி.எம்.எஸ் சிறுவர் இல்லத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கிய பென்னாகரம் எம்எல்ஏ ஜி கே மணி.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜிகே மணி அவர்கள் இன்று பிற்பகல் பென்னாகரம் அடுத்த ஏரியூர் சி எம் எஸ் சிறுவர் இல்லத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார்,இளைஞரணி மாநில துணைத்தலைவர்கள் சத்தியமூர்த்தி, மந்திரி ராஜா, ஏரியூர் ஒன்றிய செயலாளர் சதாசிவம், பாமக நிர்வாகிகள் இளங்கோவன், சேகர், மாணிக்கம், முத்துசாமி, கவுன்சிலர் ராசா, உலகநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.