பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் 54 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூர் பழையப்பேட்டையில் பாமக சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் நகர செயலர் ஆர். பெருமாள் தலைமை வகித்தார். மருத்துவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளையொட்டி, அரூர் பழையப்பேட்டையில் அருள்மிகு ஸ்ரீ கரியபெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதேபோல், அரூர் சந்தைமேட்டில் பாமகவினர் கேக் வெட்டி மருத்துவர் அன்புமணி ராமதாஸின் பிறந்த நாளை கொண்டாடினர். இந்த விழாவில் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலர் இல.வேலுசாமி, வன்னியர் சங்க மாநில செயலர் இரா.அரசாங்கம், மாவட்ட செயலர் பி.வி.செந்தில், மாநில செயற்குழு உறுப்பினர் இரா.திருவேங்கடம், ஒன்றியக்குழு துணைத் தலைவர்கள் வன்னிய பெருமாள், ஜி.சக்திவேல், அன்னை முருகேசன், தண்டபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.