மொரப்பூர் ஒன்றியம் சாமண்டஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட சாமண்டஹள்ளிபுதூர் கிராமத்தில் 35 வருடங்களுக்கு முன்பு திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டது, இப்போது இந்த கிணற்றில் நீர் இல்லாததால் பொதுமக்கள் இதை பயணப்படுத்துவது இல்லை, இந்த கிணற்றில் தடுப்புச்சுவர் மற்றும் பாதுகாப்பு மூடி இல்லாமல் இருக்கிறது.
அப்பகுதி மக்கள் கிணற்றின் சுவர் மீது ஆபத்தை அறியாமல் அமர்ந்துகொண்டு பொழுதை கழிப்பதும் மற்றும் குழந்தைகள் இந்த கிணற்று பகுதி அப்பகுதி குழந்தைகளின் விளையாட்டு பகுதி.
அப்பகுதி மக்கள் பலமுறை சாமண்டஹள்ளி ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் இந்த கிணற்றின் சுற்றி தடுப்பு சுவர், மற்றும் மேற்கூரை அமைக்கவில்லை அதனால் இந்தப் ஆபத்தான இந்த கிணற்றுக்கு மாவட்ட நிர்வாகம் தடுப்புச் சுவர் மற்றும் மேற்கூரை அமைத்து தருமாறு மக்கள் அரசாங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.