தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே மோப்பிரிப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தண்டகுப்பம் கிராமத்தில் உள்ள ஏரிகரையில் நேற்று மோப்பிரிப்பட்டி பஞ்சாயத்து குழு மற்றும் அரூர் ஜெசிஐ குழுவினர் இணைந்து 2,000 பனைவிதைகள் நட்டனர்.
இதுகுறித்து அந்த குழுவினர் கூறுகையில் ஏற்கனவே செக்காம்பட்டி, மோப்பிரிப்பட்டி உள்ளிட்ட ஏரிகரைகளின் மீது 3000 பணை விதைகள் நடப்பட்டுள்ளது. இந்த பஞ்சாயத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் மேலும் 5000 பணை விதைகள் நடப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.