மாண்பமை தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், மாண்பமை தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும், 75ம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் மாண்பமை தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25ம் ஆண்டு துவக்க விழாக்களை முன்னிட்டு கடந்த 02.10.2021 தொடங்கி 14.11.2021 வரை சட்ட விழிப்புணர்வு முகாம் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் மாற்று பரிகார குறை தீர்வு மைய அலுவலகத்திலிருந்து PAN- INDIA விழிப்புணர்வு குறித்த நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார ஊர்தியினை தருமபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் (பொ) மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி திரு.ஆ.மணிமொழி அவர்கள் இன்று (29.10.2021) கொடியசைத்து துவக்கி வைத்து சட்ட விழிப்புணர்வு குறும்படத்தினை பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியை தருமபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் (பொ) மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி திரு.ஆ.மணிமொழி அவர்கள் துவக்கி வைத்து பேசும்போது, சட்ட விழிப்புணர்வு முகாம் குறித்தும், சட்ட உதவிகள் பெற தகுதியானவர்கள் குறித்தும், எந்தெந்த வழக்குகளில் சட்ட உதவிகள் அளிக்கப்படும் என்பது குறித்தும் இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இப்பிரசார வாகனத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 5 நாட்களுக்கு தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டங்களில் 29.10.2021 இன்றும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 30.10.2021 அன்றும், அரூர் வட்டத்தில் 31.10.2021 அன்றும், பாலக்கோடு வட்டத்தில் 01.11.2021 அன்றும், பென்னாகரம் வட்டத்தில் 02.11.2021 அன்றும் வழக்கறிஞர் மற்றும் சட்ட தன்னார்வளர்கள் மூலமாக மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனத்தின் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில், குறிபிட்டுள்ள வட்டங்களில் அதிநவீன விளம்பரத்திரை வாகனத்தின் மூலம் காணொளி வாயிலாக ஒளிபரப்பபடும் இலவச சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்த குறும்படங்களை கண்டு பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் (பொ) மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி திரு. ஆ. மணிமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மின்னணு இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி திரு.ஏ.எஸ்.ராஜா அவர்கள் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி திருமதி.யூ. மோனிகா அவர்கள், மாவட்ட விரைவு மகளிர் நீதிபதி திரு.எஸ்.சையத் பக்ரத்துல்லா அவர்கள், குடும்ப நல நீதிபதி திருமதி.பி.செல்வமுத்துகுமாரி அவர்கள், மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு. ஆர்.ராஜ்குமார் அவர்கள், மாவட்ட முதன்மை சார்பு நீதிபதி திரு. ஆர். கோகுலகிருஷ்ணன் அவர்கள், கூடுதல் சார்பு நீதிபதி திருமதி .எஸ். மோகன ரம்யா அவர்கள், சிறப்பு சார்பு நீதிபதி திருமதி. எஸ். மைதிலி அவர்கள், மாவட்ட உரிமையியல் நீதிபதி திருமதி.எஸ்.சாந்தி அவர்கள், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 திரு.இ.செல்வராஜ் அவர்கள், மாவட்ட அரசு குற்றத்துறை வழக்கறிஞர் திரு.பி.கே. முருகன் அவர்கள், மாவட்ட அரசு வழக்கறிஞர் திரு.எஸ்.நந்திவர்மன் அவர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற மேலாளர், முதன்மை நிர்வாக அலுவலர், நீதிமன்ற ஊழியர்கள், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் திருமதி.பி.எஸ்.கலைவாணி அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.