தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு, காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களில் 89 இரண்டு சக்கர வாகனங்களை அரசுடைமையாக்கும் விதமாக, இன்று 06.10.2021 அன்று தருமபுரி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் தருமபுரி காவல் கண்காணிப்பாளர் திரு. சி. கலைச்செல்வன் இ.க.ப. அவர்கள் தலைமையில், உதவி ஆணையர் (ஆயம்) மற்றும் அரசு தானியங்கி பணிமனை துணை பொறியாளர், தருமபுரி ஆகியோர் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். 89 இரண்டு சக்கர வாகனங்களும் ரூ. 9,47,417/- க்கு ஏலம் விடப்பட்டு, மொத்த தொகையையும் அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த ஏலத்தை தருமபுரி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு. குணசேகரன் அவர்கள் முன்னின்று நடத்தினார். மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராஜா சோமசுந்தரம் உடனிருந்தார்.