மேல்நிலைத் தேர்வு (மார்ச் 2017 முதல் செப்டம்பர் 2018 வரை) - தனித்தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறுதல் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சென்னை, அவர்களின் கடிதத்தின்படி, மார்ச் 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலான மேல்நிலைத் தேர்வுகளின் அனைத்து பருவங்களுக்குரிய உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை கழிவுத்தாட்களாக மாற்றிடும் பொருட்டு அரசிதழில் அறிவிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, மேற்காண் பருவங்களில் தேர்வெழுதி அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாத தனித்தேர்வர்கள் தருமபுரி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிய ஆளறி சான்றிதழ்களுடன் (தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு / தற்காலிக மதிப்பெண் பட்டியல்) 30.11.2021 க்குள் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டும் கொள்ளப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட தேதிக்குள் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட்ட பின்னர் தனித்தேர்வர்கள் உரிமை கோரலாகாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அலுவலக முகவரி: அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம் இரண்டாம் தளம், ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி 636 705. தொலைபேசி - 04342 233812.
இவ்வாறு தருமபுரி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் திருமதி. கோ. காவேரி அவர்கள் தெரிவித்துள்ளார்.