Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தி, எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும், குடிநீர் தரத்தை மேம்படுத்தவும் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தி, எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும், குடிநீர் தரத்தை மேம்படுத்தவும் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இஆப., அவர்கள் நேற்று (13.10.2021) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டத்தில் நகராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுகின்றன. 

மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவங்கள்: கூரையின் மேல் விழும் மழைநீரை சேகரிக்க, வீட்டுக் கூரையின் மேல் விழும் மழைநீரை மழைநீர் கொண்டு வரும் வடிகுழாய் மூலம் கொணர்ந்து மணல் வடிப்பானில் செலுத்த வேண்டும். குடிசை வீடாக இருந்தால், கூரையின் மேல் பாலிதீன் (Polythene) மேல்விரிப்பு அமைந்து, அதன்மேல் விழும் மழைநீரை சேகரிக்கலாம். மணல் வடிப்பான் மூலம் சுத்திகரிக்கப்பட்ட மழைநீரை, தண்ணீர்த் தொட்டியில் சேமித்து உபயோகப்படுத்தலாம் அல்லது தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியிருந்தால் அதிலும் மழைநீரை சேமித்து நேரடியாக உபயோகப்படுத்தலாம்.

குழாய்க் கிணறு மூலம் மழைநீர் சேகரிக்க, மொட்டை மாடியில் விழும் மழைநீரை குழாய்கள் மூலம் வடிகட்டும் குழிக்குள் செலுத்தி பின்னர் குழாய்க் கிணற்றில் விடவேண்டும். வடிகட்டும் தொட்டி / குழி அமைக்கப்பட வேண்டும் (2' x 2' x 3') அதிகப்படியாக தொட்டியில் நிரம்பி விழும் மழைநீரைக் கசிவுநீர்க் குழி அமைத்து அதில் விடவேண்டும். உபயோகத்தில் இல்லாத குழாய்க் கிணற்றையும் பயன்படுத்தி, இம்முறையின் மூலம் மழைநீரை பூமிக்குள் செலுத்தலாம். 

குழாய்க் கிணற்றில் மழைநீர் ஊடுருவும் அளவு / வேகம் திறந்தவெளிக் கிணற்றை விட குறைவாக இருக்கும். திறந்தவெளிக் கிணறு மூலம் மழைநீர் சேகரிக்க, மொட்டை மாடியில் விழும் மழைநீரை குழாய்கள் மற்றும் வடிகட்டும் குழிக்குள் செலுத்தி பிறகு திறந்தவெளிக் கிணறு அல்லது தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் விடவேண்டும். வடிகட்டி தொட்டி / குழி குறைந்தபட்சம் 2' x 2' x 3' என்ற அளவில் அமைத்து உடைந்த கருங்கல் அல்லது கூழாங்கற்களை சுமார் 1 அடி உயர அளவில் அடிப்பகுதியில் போட்டு. அதன்மீது ஆற்று மணலை நிரப்ப வேண்டும். தேவைப்பட்டால் சிமெண்ட் பலகையால் மூடி விடலாம்.

கசிவுநீர்க் குழிகள் / துளையுடன் கூடிய கசிவுநீர்க் குழிகள் முறையில் சேகரிக்க, வீட்டைச் சுற்றியுள்ள வெளிப்பகுதிகளில் தக்க இடைவெளி விட்டு அமைக்க வேண்டும். அளவு:3' 3' 4.5' (ஆழம்). குழிகளை சதுரம் / செவ்வகம் / வட்ட வடிவில் அமைக்கலாம். குழிகளை கருங்கற்கள் /கூழாங்கல் / மணல் கொண்டும் நிரப்பலாம்.

இது மணற்பாங்கான நிலப்பகுதிக்கு ஏற்ற முறையாகும். களிமண் பகுதியாக இருந்தால் மேற்கூறிய கசிவுநீர்க் குழியின் நடுவில் ஒரு குழாய்க் கிணற்றை அமைக்க வேண்டும். குழாய்க்கிணறு 150 – 300 மி.மீ. விட்டமும் 100 – 150 அடி ஆழமும் உள்ளதாக இருக்க வேண்டும். இதுபோன்ற மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறைகள் அமைப்பதன் மூலம் மழைநீர் சேகரிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயரும், நிலத்தடி நீரின் தரம் மேன்மை அடையும், மழைநீர் தேங்குவதை தடுக்க இயலும். 

ஆகையால், நாம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவோம், பராமரிப்போம், பருவமழையின் முழுப்பயனையும் பெறுவோம். எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள், தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள், வணிக வளாகங்கள், வீடுகள், கடைகள், உணவக கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி, மழைநீர் சேகரிப்பிற்கு வித்திடுவோம். தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்ட உயர்விற்கு மழைநீரை சேமித்து நீர் சேமிப்பில் தருமபுரி மாவட்டம் முதன்மை மாவட்டமாக உருவாகிட அனைவரும் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் திரு.கே.பாபு, நிர்வாக பொறியாளர்கள் திரு.கே.சேகர், திரு.எஸ்.சங்கரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.சீனிவாசசேகர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் திரு.ஆர்.பாஸ்கரன், துணை நில நீர் வல்லுநர் திரு.எஸ்.கல்யாணராமன், உதவி பொறியாளர் திரு.ஆர்.ரகோத்சிங் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884