கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தி எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்த்திடவும், குடிநீர்த் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பொது மக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அதிநவீன எல்.இ.டி வடடியோ பிரச்சார வாகனம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் திரு.பாபு, கிருஷ்ணகிரி திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் திரு.கே.சேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சு.மோகன், திட்ட பராமரிப்பு கோட்ட நிர்வாகப் பொறியாளர் திரு.ஜெய்சங்கர், உதவி நிர்வாகப் பொறியாளர்கள் திரு.சேகர், திரு.பாஸ்கரன், உதவி பொறியாளர்கள் திரு.இரகோத்சிங், திருமதி.சாந்தி, திரு.கோவிந்தப்பன் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் உடனிருந்தனர்.