Type Here to Get Search Results !

மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (29.10.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் 378 இடங்களில் இன்று நடைபெற்று வருகின்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி இதுவரை செலுத்திக்கொள்ளாதவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தை கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும், தருமபுரி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ .ஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தகவல்.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.10.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கௌரிசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்ன பெரகனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பருவதன் அள்ளி துணை சுகாதார நிலையம், டீக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கூர்க்கம்பட்டி அங்கன்வாடி மைய வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று நடைபெற்று வரும் மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல் படி, தமிழகம் முழுவதும் கடந்த 16.01.2021 அன்று கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வழங்கப்பட்டு, பின்பு படிப்படியாக அனைத்து முன் களப்பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி, 27.10.2021 வரை தருமபுரி மாவட்டத்தில் முதல் தவணை 7,82,262 நபர்களுக்கும், இரண்டாம் தவணை 2,57,631 நபர்களுக்கும் ஆக மொத்தம் 10,39,893 நபர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா மூன்றாம் அலையை கருத்தில் கொண்டு 18 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் விரைந்து கொரோனா தடுப்பூசி செலுத்திட வேண்டுமென ஆணையிட்டதன் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் மாவட்டம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டது. இதன்படி தருமபுரி மாவட்டத்தில் கடந்த 12.09.2021 அன்று 879 இடங்களில் நடந்த முதல் மாபெரும் தடுப்பூசி திருவிழாவில் 49,136 நபர்களுக்கும், கடந்த 19.09.2021 அன்று 215 இடங்களில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி திருவிழாவில் 22,097 நபர்களுக்கும், 26.09.2021 அன்று 379 இடங்களில் மூன்றாம் கட்டமாக நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி திருவிழாவில் 50,594,18 நபர்களுக்கும், 04.10.2021 அன்று 380 இடங்களில் நான்காம் கட்டமாக நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி திருவிழாவில் 35,376 நபர்களுக்கும், 10.10.2021 அன்று 578 இடங்களில் ஐந்தாம் கட்டமாக நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி திருவிழாவில் 53,820 நபர்களுக்கும், 23.10.2021 அன்று 601 இடங்களில் ஆறாம் கட்டமாக நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி திருவிழாவில் 33,059 நபர்களுக்கும் என மொத்தம் 6 நாட்கள் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி திருவிழாவில் மட்டும் 2,44,082 நபர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று 29.10.2021 வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் 378 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் நாளை (30.10.2021) சனிக்கிழமை அன்று மாவட்டம் முழுவதும் 488 இடங்களில் ஏழாம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ளது. இக்கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மற்றும் நாளை நடைபெறும் மாபெரும் தடுப்பூசி திருவிழாவிற்கு 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு தருமபுரி மாவட்டத்தில் 91510 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இருப்பு உள்ளன.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் (29.10.2021) சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமிலும் மற்றும் நாளை (30.10.2021) சனிக்கிழமை அன்று நடைபெறும் 7-வது தடுப்பூசி திருவிழாவிலும் மாவட்டம் முழுவதும் உள்ள விடுபட்ட வயதுக்கு மேற்பட்ட நபர்கள், முன்களப்பணியாளர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், மற்ற அரசு ஊழியர்கள், வணிகர் சங்கங்கள், மருத்துவ பிரதிநிதிகள் சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவக ஊழியர்கள், மருந்தக ஊழியர்கள், கோவில் மற்றும் சுற்றுலா தல ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

நமது மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும், நோய் தொற்று வரும் முன் நம்மை காத்துக்கொள்வதற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிக மிக அவசியமான ஒன்றாகும். மக்களை கொரோனா நோய் தொற்றிலிருந்து காக்கும் நோக்கில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களை மாவட்டம் முழுவதும் அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. மேலும், மக்கள் அனைவரும் முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகழுவுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்ற நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை முழுமையாக கடைபிடித்து கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதோடு தருமபுரி மாவட்டம் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக உருவாகுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு காலை முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை தந்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்த ஆய்வின் போது துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சவுண்டம்மாள், பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் திரு.பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.வடிவேல், பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஜெயச்சந்திர பாபு உட்பட தொடர்புடைய மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884