உத்தனப்பள்ளியில் BLS நிர்வாக சார்பில் இலவச தொழில் பயிற்சி முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளியில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 40 கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வேளையின்றி உள்ளனர்.
இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர்.லக்ஷ்மிகாந்த் அவர்களின் முயற்சியால் உத்தனப்பள்ளி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இளைஞர்களுக்காக இலவச தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
"பிரைட் லைட் சொசைட்டி" சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை வேலையில்லாதவர்களுக்கு 600 க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு இலவச பயிற்ச்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்ப்படுத்தி கொடுத்துள்ளனர்.
மேலும் இந்த இலவச தொழில் பயிற்ச்சி முகாமை உத்தனப்பள்ளி ஊராட்சிமன்ற தலைவர் லக்ஷ்மிகாந்த் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சி ஏராளமான வேலையில்லாத இளைஞர்கள் முகாமில் கலந்துகொண்டனர்.