ஓசூரில் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரம் 33வது வார்டு பகுதியில், செக்கிழுத்தசெம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் 150 வதுபிறந்த நாள் விழாவை யொட்டி அவரின் திருவப்படத்திற்கு ஓசூர் மாநகர பொறுப்பாளர் , முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு..சத்யா அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஞானசேகரன், கோவிந்தசாமி, முருகன் செல்வராஜ்,சேகரன் மோகன், தேவதாஸ், பிரேம்குமார், தரணிதரன், வெற்றிவேல், சத்யமூர்த்தி, மணி, குழந்தைசாமி, தேன்சாமி, பஞ்சரத்தனம், வடிவேல், நாராயணன், அன்பழகன், ராதாகிருஷ்ணன், தம்பாச்சாரி, சந்தானகிருஷ்ணன், ஜெகதீஸ்வரன், விஷ்ணு, ராமகிருஷ்ணன், செந்தில் மற்றும் வார்டு பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.