பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று காலை பென்னாகரம் பத்திரிக்கையாளர்கள் மன்றத்தின் சார்பாக செயலாளர் சிவக்குமார் தலைமையில் பென்னாகரம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டையில் சன் டிவி செய்தியாளர் குமரேசன், தினகரன் செய்தியாளர் கணேசன் ஆகியோர்களை சில குண்டர்கள் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்கப்பட்டதை கண்டித்தும், சில நாட்களுக்கு முன்பு சத்தியம் தொலைக்காட்சி தாக்கப்பட்டதற்கும், பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டத்தை வலுப்படுத்த வேண்டியும் மத்திய மாநில அரசுக்கு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீதர், தர்மராஜா, ஆகியோர் பேசினர். இறுதியாக பென்னாகரம் பத்திரிகையாளர்கள் மன்ற தலைவர் ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மன்ற பொருளாளர் குபேந்திரன் மன்ற நிர்வாகிகள், நரசிம்மகுமார், சேட்டு, மாரியப்பன் நவீன்ஜார்ஜ் இர்ப்பான், இன்பசேகரன் இம்ரான், ராஜேந்திரன், கனகராஜ் உள்ளிட்ட செய்தியாளர்கள் கலந்துகொண்டனர்.