கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரண்தேஸ்வி IPS அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் அவர்களின் மேற்பார்வையில் கிருஷ்ணகிரி சைபர் கிராம் காவல் ஆய்வாளர் தலைமையில் உட்கோட்ட வாரியாக காவல் உதவி ஆய்வாளர்கள் தனிப்படைகள் அமைத்து தொலைந்து போன செல்போன்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு அதில் சுமார் 19.75 லட்சம் மதிப்பிலான .109 செல்போன்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் .
மேலும் செல்போன் தொலைந்தால் பறித்துக்கொண்டு சென்று விட்டாலோ உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கவும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.