தருமபுரியில் ரோட்டரி சங்கம் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தருமபுரி ரோட்டரி சங்கம்,கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தருமபுரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் தருமபுரி ரோட்டரி ஹாலில் நடைபெற்றது, இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கண்ணில் புரை உண்டாகுதல், கண்ணீர்பை அடைப்பு, மாலைக்கண், மாறுகண், கண்ணில் சதை வளர்ச்சி, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த பணியில் ஈடுபட்டு வரும் இச்சங்கம் கொரோனா நோய்த் தொற்று கட்டுபாடு காரணமாக சிகிச்சை முகாம் இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டதால் இன்று முதல் வாரம் தோறும் சனிக்கிழமை நாளில் கண் சிகிச்சை முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.