நேருக்கு நேர் பைக் மோதி ஒருவர் பலி: போலீசார் விசாரணை.
தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம் வேப்பம்பட்டி அருகே கருஞ்சரடு கிராமத்தைச் சார்ந்த வையாபுரி மகன் நாகராஜ் நேற்று முன்தினம் தனது பைக்கில் சொந்த வேலையாக அரூர் நகருக்கு போன வேலை முடித்துக் கொண்டு சொந்த கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரே பைக்கில் வந்த புறாக்கள்யுட்டையை சார்ந்த செல்வன் மகன் பார்த்திபன் என்பவரும் நேருக்கு நேர் பைக்கில் மோதியது.
மோதியதில் நெஞ்சு, நெற்றி பகுதியில் காயமடைந்த நாகராஜன் ஆம்புலன்ஸ் மூலம் அரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு,மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு செல்லும்வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து நாகராஜ் மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.