தர்மபுரி BDO அலுவலகம் அருகே அவார்னஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
ஆயுஸ் அமைச்சகம் மற்றும் தேசிய மருத்துவ தாவர வாரியமாது 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதத்திலும் மற்றும் மூலிகைத் தாவரங்களை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்திய திருநாடு முழுவதும் 75 லட்சம் மூலிகைத் தாவர கன்றுகளை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவார்னஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் ஆயுஸ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மருத்துவ தாவர வாரியம் இணைந்து விவசாயிகளுக்கும், வீடுகளுக்கும் இலவச மூலிகை தாவர கன்றுகளை வழங்கப்பட்டது தர்மபுரி பூபதி திருமண மண்டபத்தி நடைபெற்றது.
இவ்விழாவானது முனைவர். V. மலையமான், (அவார்னஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம்) ஏற்பாட்டில் மற்றும் பாரி ரோட்டரி கிளப் தலைவர், காவேரிப்பட்டணம் அவர்கள் முன்னிலையில். முனைவர். A.சாமுவேல்ராஜ்குமார், அவர்கள் (மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தர்மபுரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்) இவ்விழாவிற்குத் தலைமையேற்று மூலிகை தாவரங்கள் பற்றி சிறப்புரையாற்றி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு செம்பருத்தி, மருதாணி, காட்டு நெல்லி., ஆடாதோடை, கற்பூரவள்ளி, நிலவேம்பு, சோற்றுக்கற்றாழை , மூக்கிரட்டை, வல்லாரை, பிரண்டை, செம்பருத்தி, கருவேப்பிலை, துளசி, நொச்சி போன்ற மூலிகைத் தாவர கன்றுகளை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கினார்..