தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தருமபுரி நகராட்சியில் உள்ள பகுதிகளில் 20.09.2021 முதல் 25.09.2021 முடிய நகர் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்திட மாபெரும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கையின் பேரில் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் அவர்களது ஆணையின்படி வருகின்ற வடகிழக்கு பருவமழைக்காலத்தினை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தருமபுரி நகராட்சியில் உள்ள பகுதிகளில் 20.09.2021 முதல் 25.09.2021 முடிய நகர் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்திட மாபெரும் முகாம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தருமபுரி மாவட்டத்தில் வருகிற வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒனீறியங்களுக்குட்பட்ட 251 கிராம ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் தருமபுரி நகராட்சி பகுதிகளில் மிகப்பெரிய முகாம் நடத்திடும் வகையில் இன்று 20.09.2021 இம்முகாமினை நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி மற்றும் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டி ஊராட்சி, தருமபுரி நகராட்சி மதிகோண்பாளையம் ஆகிய இடங்களில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ. ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு எதிர்நோக்கி உள்ள வடகிழக்கு பருவமழையினால் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளது, அதிகப்படியாக தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலையும் உள்ளது. மேலும் மழைநீர் சாக்கடையுடன் கலந்து தேங்குவதால், இதர தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
ஆகவே, எதிர்வரும் பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திட ஏதுவாக வரும் 20.09.2021 முதல் 25.09.2021 வரை "மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம்”-ஆக அறிவித்து ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் நகரில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைபடுத்தும் பணி தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் நடைபெறுகிறது.
இம்மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமில், மழைநீர் வடிகால்கள் அனைத்தையும் பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர மழைநீர் வடிகால் மற்றும் சிறிய மழைநீர் வடிகால் என வகைப்பாடு செய்யப்பட வேண்டும். பெரிய மழைநீர் வடிகால்களில் சேகரமாகியுள்ள வடிகால் படிவுகளை (50) அகற்றுநைற்கு பொக்லைன். ஜெட் ராடிங் இயந்திரம், ஜே.சி.பி இயந்திரம் மற்றும் தேவைப்படும் இதா இயந்திரங்களை போதுமான அளவில் ஏற்பாடு செய்து பயன்படுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இயந்திரங்கள் இல்லாத உள்ளாட்சிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர சங்கங்கள் மூலமாகவும் ஏற்பாடு செய்து கொள்ளலாம். மேலும், பணியின் அவசர அவசியத்தை கருத்தில் கொண்டு. தேவைப்படும் இயந்திரங்களை உரிய ஒப்பந்த வழிமுறைகளினீபடி பெற்றும் பணி மேற்கொள்ள வேண்டும். நடுத்தர மற்றும் சிறிய மழைநீர் வடிகால்களில் உள்ள படிவுகளை அகற்றுவதற்கு உள்ளாட்சிகளில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
வடிகால்களில் படிவுகளை அகற்றும் போது வடிகாலின் ஆரம்ப பகுதியில் இருந்து தொடங்கி வடிகால் இறுதி பகுதி வரை எவ்வித விடுதலுமின்றி பணியை முடிக்க வேண்டும். பணியாளர்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அணிந்து பணி செய்வதற்கு அறிவுறுத்த வேண்டும். மழைநீர் வடிகால் படிவுகளை அகற்றுவதற்கு போதுமான தளவாட சாமன்களை (54101௧ 1005) முன்ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.
உள்ளாட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் 6 நாட்களுக்குள் பணியினை முடிப்பதற்கு ஏதுவாக, குடியிருப்பு பகுதிகளை பிரித்திட வேண்டும். தெரிவு செய்யப்பட்ட இடத்தில் உள்ள அணைத்து வடிகால்களில் உள்ள படிவுகளை அகற்றிய பின்னரே, அடுத்த இடத்தில் பணியினை மேற்கொள்ள வேண்டும். இதற்கான செயல்திட்டத்தினை இத்திட்டத்தினை முழுமையாக 6 நாட்களுக்குள் செயல்படுத்தி முடித்திட தேவையான வாகனங்கள், பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை அலுவலர்கள் ஆகியோர்களை வார்டு மற்றும் நாள் வாரியாக பொறுப்பு நிர்ணயம் செய்து உத்திரவு வழங்க வேண்டும்.
இச்செயல் திட்ட காலத்தில் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர அலுவலர்கள் மற்றும் பணியார்கள் விடுப்பில் செல்லக் கூடாது. அகற்றப்பட்ட வடிகால் படிவுகளை அன்றைய தினமே அப்புறப்படுத்தி கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். மழைநீர் வடிகால்கள் மீது ஆக்கிரமிப்புகள் இருப்பின் பணிக்கு முந்தைய தினமே சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புதார்களுக்கு தெரியப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.ஜுனைத்து பொறியாளர்களும் உள்ளாட்சிகளில் உள்ள அனைத்து சுகாதார அலுவலர்களுடன் இணைந்து தயார் செய்ய வேண்டும்.
வார்டுகளில் உள்ள சிறுபாலங்களை கணக்கிட்டு படிவுகளை அகற்றி கழிவுநீர் தடையின்றி செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறுபாலங்களில் மின்சார கேபிள்கள், டெலிபோன் கேபிள்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் இடையூறாக இருப்பின் அதனை மாற்றியமைப்பதற்கு பொறியியற் பிரிவினால், சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வடிகால்களில் அடைப்பு ஏற்பட ஏதுவாக உள்ள இடங்கள் மற்றும் 100 மீட்டர் தூரத்திற்கு ஒரு இடத்தில் கம்பி வலை (பாஜி பொருத்த வேண்டும். வடிகால்களுக்கு இடையே இணைப்பு இல்லாத இடங்களை முறையாக இணைக்க வேண்டும். வடிகால் படிவுகள் அகற்றும் போது வடிகால்கள் மற்றும் தெருக்களில் சேகரமாகியுள்ள திடக்கழிவுகள் கட்டிட இடிபாடுகள் மற்றும் செடி, கொடி புதர்களை முழுமையாக அகற்றிட வேண்டும். பணி நடைபெறும் பகுதிகளில் உள்ள குறுகிய சந்துகளில் திடக் கழிவுகள் சேகரமாகி இருந்தால் உடன் அகற்றப்பட்டு கிருமி நாசினி தெளித்து மீண்டும் திடக் கழிவுகள் சேராமல் தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும்.
காலியிடங்களில் சேகரமாகியுள்ள உள்ள திடக்கழிவுகளையும் மழைநீர் தேங்கும் தேவையற்ற கழிவுகளையும் அகற்றி வேண்டும். சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் பொறியியற் பிரிவு மூலம், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி முடிவடைந்த பகுதிகளில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் பொது மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பொதுசுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பணி நடைபெறும் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும்.இப்பணிகளை பொது மக்கள் அறியும் வண்ணம் ஊடகங்களில் முன்னறிவிப்பு செய்திட வேண்டும். பொது மக்களிடையே திடக் கழிவு மேலாண்மை பணி மற்றும் பொது சுகாதார பணி குறித்து இலகு ரக வாகனங்களின் மூலம் விழப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பணி நடைபெறும் இடங்களில் உள்ள பாதா சாக்கடை ஆய்வுக்குழிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, சேகரமாகியுள்ள படிவுகளை தகுந்த உபகரணங்களை கொண்டு அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை பிரிவில் அனைத்து இயந்திரங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பணி நடைபெறும் பகுதிகளில் குடிநீர் குழாய் கசிவு அல்லது உடைப்பு ஏதேனும் இருப்பின் உடன் சீரமைக்கப்பட வேண்டும்.
பணி நடைபெறும் பகுதிகளில் தெருவிளக்கு ஏதேனும் எரியாமல் இருப்பின் உடன் சீரமைக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் நகராட்சிகளில் உள்ள கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூய்மைப்படுத்துவதன் மூலம் எதிர் வரும் வடகிழக்கு பருவ மழைகாலத்தில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவது தவிர்க்கப்படுவதுடன், கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்களில் தேங்கி நிற்கும் நீரினால் ஏற்படக்கூடிய நோய் தொற்று தடுக்கப்படும் மேலும், நகரின் அழகும் மேம்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ. ஆஃப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களராட்சிகள்) திரு. அ.சீனிவாசசேகர், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(வ.ஊ,/கிஊ) திருமதி.மு.சகிலா திரு.மா.மணிவண்ணன், தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(வ.ஊ.கி.ஊ) திரு. ஆர்.கணேசன், திரு.பி.கே.மகாலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.