இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச௪.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறந்த டிஜிட்டல் ஒளிபரப்பு கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் 15.09.2017 முதல் டிஜிட்டல் ஒளிபரப்பிற்கான விலையில்லா செட்டாப் பாக்ஸ்கள் உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி - யின் செட்டாப் பாக்ஸினை பெற்ற வாடிக்கையாளர்களுக்கு தரமான முறையில் சிக்னல் வழங்கப்பட்டு வருகிறது. செட்டாப் பாக்ஸில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனை தங்களது ஆபரேட்டர்களிடம் கொடுத்து அதற்கு பதிலாக மாற்று செட்டாப் பாக்ஸை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு பொதுமக்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மட்டுமே குறைந்த சந்தா தொகையில் பொதுமக்களுக்கு அதிக சேனல்களை வழங்கி வருகிறது. எனவே ஆபரேட்டர்கள் பொதுமக்களுக்கு தேவைப்படும் செட்டாப் பாக்ஸ்களை வழங்கி சேவை வழங்கிடவும், தங்களது அனலாக் நிலுவை தொகையை செலுத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வருவாய் வசூல் சட்டபடி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.