கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்து தேன்கனிக்கோட்டை தாலுகா காப்புக் காட்டில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியதாக ஒருவரை தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை தாலுகா, வனச் சரகம் பீட்டில் உள்ள கோயில் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் வட்ட வடிவு பறை பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் இருந்த போது சிலர் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சித்துள்ளனர். வனத்துறையினரைப் பார்த்தவுடன் சிலர் தப்ப ஓடிவிட்டனர். இதில் ஒருவரை வனத்துறையினர் பிடித்தனர். கெலமங்கலம் அடுத்து ஒண்ணுகுறிக்கை கிராமத்தை சேர்ந்த ராஜப்பா (45) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த வனத்துறையினர் ,காப்புக் காட்டில் வெட்டப்பட்ட சந்தன மரம் மற்றும் மரங்களை வெட்ட பயன்படுத்திய கோடாரி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து தேன்கனிக்கோட்டை வனச் சரக அலுவலகம் கொண்டு வந்தனர்.