தருமபுரி மாவட்டத்தில் 09.10.2021 -ல் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், திட்ட இயக்குநர்/உறுப்பினர் செயலாளர்,சென்னை, திரு.T.N.ஹரிஹரன், இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் பார்வையாளராக ( (Election Observer) தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் பாப்பிரெட்டிப்பட்டி வாக்கு எண்ணும் மையத்திலும் கொக்கராப்பட்டி வாக்கு மையத்திலும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்ட தேர்தல் பார்வையாளர் (Election Observer) சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள அரசு கூடுதல் சுற்றுலா மாளிகையில் முகாமிட்டு தேர்தல் தொடர்பான பணிகளை கண்காணிக்கிறார். எனவே ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் தொடர்பாக தேர்தல் பார்வையாளரை அவரது முகாம் அலுவலகமான சேலம் கூடுதல் சுற்றுலா மாளிகை அறை எண்.01 -ல் பிற்பகல் 02.00 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை நேரிலும், 9487935429 கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.