கிருஷ்ணகிரி அருகே இயங்கிவரும் தமிழக அரசின் டாமின் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு ஆய்வு பணிகளுக்கு நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் , மற்றும் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் வருகை தந்த நிலையில் பர்கூர் ஒன்றியத்தில் உள்ள தமிழக அரசின் கனிம நிறுவனமான டாமின் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு கிரானைட் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தனர், இதில் கற்களில் இருந்து துண்டிக்கும் பகுதிகள், சலவை செய்யும் பணிகள், ஏற்றுமதி செய்யும் பணிகளை ஆய்வு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டத்தின்போது தமிழகத்தில் உள்ள அரசின் டாமின் தொழிற்சாலைகளை மேம்பட்ட தொழிற்நுட்பம், உரிய வசதி வாய்ப்புகளுடன் முன்னணி நிறுவனமாக கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாவும், இதில் உலக நாடுகளின் தேவைக்கு ஏற்ப தரமான இயற்கையான கிரானைட் கற்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணப்படுகிறது.
அவற்றை வெளிப்படைத் தன்மையுடன் ஒப்பந்தம் கோரப்பட்டு அரசின் டாமின் மூலமாக உரிய முறையில் கற்களை வெட்டி எடுத்து, தரமான பொருட்களை உற்பத்தி செய்யவும், நியாயமான விலையில் ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கபடும் என்று குறிப்பிட்டார்
இதற்கு உரிய முன்னேற்ற பாதையில் டாமின் நிறுவனத்தை கொண்டு செல்ல அதற்கேற்ப உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் டி. மதியழகன், கனிம வள சேலம் மண்டல துணை இயக்குனர் எல்.சுரேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட கணிம வள அலுவலர் எஸ். வேடியப்பன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் உடன்இருந்தனர்.