மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையிலான அரசு பதவியேற்று 4 மாதத்தில், ஆகஸ்ட் 2021 வரை ரூ.428.62 கோடி கனிம வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (23.09.2021) மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் தலைமையில் இயக்குநர், புவியியல் மறறு; ம் சுரங்கத்துறை திரு.இல.நிர்மல் ராஜ், இ.ஆ.ப., அவர்கள, ; மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் சேலம் திரு.சி.கதிரவன் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையைச் சார்ந்த அனைத்து மாவட்ட அலுவலர்களின் பணிதிறன் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபற்றது.
மாண்புமிகு நீர் வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் தெரிவித்ததாவது: இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்டு 2021 வரையில் கனிம வருவாய் ரூ.428.62 கோடி ஈட்டப்பட்டுள்ளது. மேலும், இனி வரும் மாதங்களில் அதிக வருவாயினை அரசுக்கு ஈட்டிட நடவடிக்கை மேற்கொண்டு, கனிம வருவாயை அதிகரிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து மாவட்ட அலுவலர்களும் குறைந்தபட்சம் மாதத்திற்கு 10 வாகனங்கள் கைப்பற்றிடவும், அண்டை மாநிலங்களுக்கு அனுமதியின்றி கனிமங்களை எடுத்துச்செல்லும் கனிம வாகனங்களை முற்றிலும் தடுக்க மாவட்ட அலுவலர்கள் அதிக அளவில் வாகனங்களை கைப்பற்ற வேண்டும். மேலும், மண்டல பறக்கும் படையினர் முனைப்புடன் செயல்பட்டு அதிக அளவில் வாகனங்களை கைப்பற்றி கனிம திருட்டினை முற்றிலும் தடுத்து மாநில அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டி தர வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட மண்டல இணை இயக்குநர்கள், துணை உதவி இயக்குநர்கள் மற்றும் பறக்கும்படை அலுவலர்கள் ஆகியோர் உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளை கண்டறிந்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பல்வேறு நீதிமன்ற வழக்குகளில் வழங்கப்பட்ட நீதிமன்ற ஆணைகள் படி தக்க நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.
புவியியல் மற்றும் சுரங்கத் துறையினை மேம்படுத்தும் நோக்கில் அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தர அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். மாவட்ட மற்றும் மண்டல பறக்கும்படை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன் இப்பகுதிகளை களஆய்வு மேற்கொண்டு, தேவைப்படின், ஆளில்லா விமான தொழில்நுட்பத்தின் மூலம் அளவீடு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி ஆகியோர் இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை திரு.இல.நிர்மல் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இஆப., அவர்கள் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.மதியழகன் ஆகியோருடன் இன்று (23.09.2021) தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்குச் சொந்தமான கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், பி.ஜி.ஆர்.மாதேப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள கிரானைட் ஓடுகள் மெருகேற்றும் தொழிற்சாலை செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். டாமின் கிரானைட் குவாரிகள் உற்பத்தியினை அதிகரித்து கூடுதல் வருவாய் ஈட்டி அரசுக்கு வருவாயை அதிகரிக்கவும், இலாபகரமாக சந்தைபடுத்தவும் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும், கிரானைட் ஓடுகள் மெருகேற்றும் தொழிற்சாலையை இலாபகரமாக செயல்பட தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள்.
மேலும், டாமின் கிருஷ்ணகிரி கோட்டத்திற்கு உட்பட்ட அஜ்ஜனஹள்ளி கருப்புக்கல் கிரானைட் குவாரி, செந்தாரப்பள்ளி மற்றும் தட்ரஹள்ளி பல வண்ண கிரானைட் குவாரிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து மேற்படி குவாரிகளை சுற்றுச்சூழல் பாதுகாப்புடனும் இலாபகரமாகவும் தொடர்ந்து இயக்கிட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் செயல்படாமல் இருக்கும் மற்றொரு தொழிற்சாலையை சுற்றுச் சூழல் அனுமதி பெறறு; விரைவில் செயல்படுத்தவும் அரசுக்கு வருவாய் அதிகரிக்கவும் அறிவுரை வழங்கினார்.
DBM மேக்னசைட்டை மதிப்பு கூட்டி சந்தைபடுத்த ரூபாய் 40 இலட்சம் செலவில் கருவிகள் நிறுவப்பட்டு பிப்ரவரி-2022 முதல் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், டியுனைட் கனிமத்தை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்த ரூபாய் 25 இலட்சம் செலவில் கருவிகள் நிறுவப்பட்டு பிப்ரவரி-2022 முதல் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும் இந்நிதியாண்டில் ரூ.15.63 கோடி அரசுக்கு இலாபம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது என மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் தெரிவித்தார்.
பர்கூர் வட்டம், பி.ஜி.ஆர்.மாதேப்பள்ளி கிரானைட் ஓடுகள் மெருகேற்றும் தொழிற்சாலை ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ.சாய் சரண் தேஜஸ்வி இகாப., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி.மணிமேகலை நாகராஜ், வருவாய் கோட்டாட்சியர் திரு.சதீஸ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.செங்குட்டுவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.சுகவனம், திரு.வெற்றிசெல்வன், தமிழ்நாடு கனிம நிறுவன பொது மேலாளர் திரு.ஹென்றி இராபர்ட், பொது மேலாளர் (பொ), திரு.வ.சந்தானம், உதவி பொது மேலாளர் (உற்பத்தி), திரு.ஈ.கணேசன், துணை மேலாளர் (சுரங்க குத்தகை), திரு.ஜவஹர், தொழிலக மேலாளர் (பொ) மற்றும் திரு.ரவீந்திரன், கோட்ட மேலாளர் (பொ) மற்றும் பர்கூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி.கவிதாகோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.