அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட நவீன கழிப்பிட கட்டடத்தை மாணவிகள் பயன்பாட்டிற்கு திறப்பதற்காக வந்த எம்பி செந்தில்குமார் ஆத்திரத்தில் திரும்பிச் சென்றார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தர்மபுரி எம்பி செந்தில்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 11.50 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி மாணவிகள் பயன்பாட்டிற்காக நவீன கழிப்பிட கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் அனைத்து பணிகள் முடிவடைந்து நேற்று மத்தியம் மாணவிகள் பயன்பாட்டிற்காக திறப்பதற்காக எம்பி பள்ளிக்கு வந்து பார்வையிட்டார்.
அப்பொழுது கழிப்பிட கட்டிட பணி முடிவடையாமல் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்து ஒப்பந்தக்காரரை அழைத்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. எனவே தற்பொழுது இந்த கட்டிடத்தை நான் திறக்க மாட்டேன். ஒப்பந்தத்தின் போது கூறப்பட்ட அனைத்து பணிகளும் முழுமையாக செய்து முடிக்க வேண்டும். இது போன்ற முறையற்ற செயலில் ஈடுபட்டால் மாவட்டத்தில் அரசு கட்டிடங்கள் கட்டும் காண்ட்ராக்டர் உங்களுக்கு கிடைக்காமல் போய் விடும் என எச்சரித்து சென்றார்.