
இவ்விழாவில் 63 ஆசிரியர்களுக்கு இணையவழி மூலமாகவும், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 27 ஆசிரியர்களுக்கு நேரடியாகவும் விருதுகள் வழங்கப்பட்டது.
விருதுகள் வழங்கும் விழாவிற்கு, மருதம் நெல்லி கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் கே. கோவிந்த் தலைமை தாங்கினார்.
மலரும் உள்ளாட்சி இதழாசிரியர் பொம்மிடி முருகேசன் வரவேற்புரையாற்றினார்.
இவ்விழாவில் கடத்தூர் கிரீன்பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் எவரெஸ்ட் ஆர். முனிரத்தினம்,
மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் என்.மகேந்திரன், தன்னம்பிக்கை பேச்சாளர் அஜய்குமார் பெரியசாமி, நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் கூத்தப்பாடி மா.பழனி, கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் தலைவர் டி.எஸ்.சசிகுமார் செயலாளர் பவுன்ராஜ் சுப்பிரமணி, இன்டர்நேசனல் லா பவுண்டேசன் தருமபுரி மாவட்ட தலைவர் ந.பிறைசூடன், இந்தியன் பில்லர்ஸ் நிறுவனர் வினோத் நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு "நல்ஆசான்' விருதுகள் வழங்கி வாழ்த்தி பேசினர்.
இறுதியில் எவர்குரோ இந்தியா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜர்னல்.வி. முருகேசன் நன்றி கூறினார்.