இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. தருமபுரி மாவட்டத்தில், வேளாண்மை இணை இயக்கநர் அலுவலகத்தில் உரம் வரவு, விற்பனை மற்றும் இருப்பு சம்பந்தமாக கண்காணிக்க உரம் காண்காணிப்பு பிரிவு” 17-09-2021 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இக்கண்காணிப்பு பிரிவு, காலை 10.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை செயல்படும். அனைத்து வகை உரங்கள் விநியோகம், விற்பனை போன்றவற்றில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை விவசாயிகள் நேரிலோ அல்லது கீழ்கண்ட தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு தெரிவிப்பதுடன் இது தொடர்பான விவரங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
- வேளாண்மை உதவி இயக்குநர், தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு, தருமபுரி - 9443563977.
- வேளாண்மை அலுவலர், தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு, தருமபுரி - 9786088253.
மேலும் விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு அந்தந்த வட்டாரத்தில் உரம் தேவை மற்றும் உரம் சம்பந்தமான விவரங்களையும் பெற்றுக் கொள்ளலாம். வேளாண்மை உதவி இயக்குநர்கள், வட்டார அளவிலான கண்காணிப்புக் குழு தொலைபேசி எண்
- வேளாண்மை உதவி இயக்குநர், தருமபுரி 9940760038
- வேளாண்மை உதவி இயக்குநர், நல்லம்பள்ளி 9443635600
- வேளாண்மை உதவி இயக்குநர், பாலக்கோடு 9080300345
- வேளாண்மை உதவி இயக்குநர், காரிமங்கலம் 8443207571
- வேளாண்மை உதவி இயக்குநர், பென்னாகரம் 8526719919
- வேளாண்மை உதவி இயக்குநர், அரூர் 8443573870
- வேளாண்மை உதவி இயக்குநர், மொரப்பூர் 6382898248
- வேளாண்மை உதவி இயக்குநர், பாப்பிரெட்டிப்பட்டி 8443081440
எனவே அனைத்து விவசாயிகளும் இவ்வசதியினை பயன்படுத்தி பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.