கூடு இணைப்பு பணியாளர் திட்டத்தின் கிராம அளவிலான கூட்டம்.
இன்று தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் பஞ்சாயத்தில் கூடு இணைப்பு பணியாளர் திட்டத்தின் மூலம் கிராம அளவிலான கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பஞ்சாயத்து தலைவர் திரு.குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார், மாவட்ட வள அலுவலர் திரு.மு சுப்ரமணி அவர்கள் தலைமை தாங்கி திட்டம் சார்ந்த பணிகள் குறித்தும் இணைப்பு பணியாளர் திட்டம் குறித்தும், இத் திட்டத்தின் பயன்பாடு குறித்தும் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார், மற்றும் இக்கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், மண்டல மேற்பார்வையாளர் திருமதி.பழனியம்மாள், இணைப்பு பணியாளர் திருமதி.சுமித்ரா, வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து செயலாளர், சுகாதார பணியாளர்கள், கிராம செவிலியர், சுகாதார ஆய்வாளர், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.