தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.,இ.ஆ.ப., அவர்கள் பட்டு வளர்ச்சித்துறை பணிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி., இ.ஆ.ப., அவர்கள் பட்டு வளர்ச்சித்துறை பணிகளை இன்று (07.09.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் ஏலமுறையில் நடைபெறும் பட்டுக்கூடு பரிவர்த்தனை பணிகள் ஆய்வு செய்து, விற்பனைக்கு வந்திருந்த நாமக்கல், திண்டுக்கல், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்ட பட்டு விவசாயிகளிடம் பட்டுத்தொழில் குறித்தும், அங்காடி பணிகள் குறித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.,இ.ஆ.ப., அவர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, செட்டிக்கரை பகுதியில் உள்ள திரு.மகேந்திரன் பட்டு விவசாயியின் மல்பெரி தோட்டம் மற்றும் புழுவளர்ப்பு பணிகள் ஆய்வு செய்து பட்டு விவசாயியிடம் பட்டுத்தொழிலின் மேன்மைகள் பற்றி மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். பட்டு விவசாயி, மற்ற பயிர்கள் போலன்றி மல்பெரி பயிர் மாதமாதம் வருமானம் தரக்கூடியது என்றும், மற்ற பயிர்களுக்கு தேவைப்படும் கூலி ஆட்கள் விட இத்தொழிலில் மிகவும் குறைவான ஆட்கள் கொண்டு எளிதில் பணி முடித்து நல்ல இலாபம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பட்டு விவசாயிகளிடம் தெரிவித்தார். மதிகோன்பாளையத்தில் உள்ள தனியார் பலமுனை பட்டுநூற்பாளர் திரு.பிரகாஷ் பட்டு நூற்பு மையத்தை ஆய்வு செய்தார். பட்டுநூல் உற்பத்தியில் உள்ள இடர்பாடுகள் மற்றும் பட்டு விற்பனை குறித்து கேட்டறிந்தார். தருமபுரி மாவட்டத்தில் 3526.80 ஏக்கரில் 2174 பட்டு விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்து பட்டுத்தொழில் மேற்கொண்டு வருகின்றனர். தற்சமயம் தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் ஒரு கிலோ ரூ.550/- வரை பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்ட விவசாயிகள் பட்டுத்தொழில் மேற்கொண்டு பொருளாதார மேம்பாடு அடைந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.,இ.ஆ.ப., கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது தருமபுரி மண்டல இணை இயக்குநர் திரு.எஸ்.ரமேஷ், தருமபுரி உதவி இயக்குநர் திரு.மா.முருகன், பென்னாகரம் உதவி இயக்குநர் திரு.இரா.வில்சன் மற்றும் பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பட்டு வளர்ச்சித்துறைபணிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செப்டம்பர் 07, 2021
0
Tags