தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி மாபெரும் தூய்மை பணி கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தி தீவிரமாக தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பென்னாகரம் பேரூராட்சி செயலாளர் கீதா கூறியதாவது பென்னாகரம் பேரூராட்சியில் கடைவீதி, பஸ் நிலையம், முள்ளுவாடி எட்டியாம்பட்டி, கிருஷ்ணாபுரம் போடூர் உட்பட 18 வார்டுகளில் அமைந்துள்ள தெருக்களில் வடிகால் கால்வாய்கள் தூய்மை செய்யப்பட்டு மழைக்காலங்களில் தெருக்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்காதவாறு தூய்மை பணிகள் மேற்கொண்டு வருகிறது. இம்மாதம் 20ம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 6 நாட்கள் இப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
அதன் தொடர்ச்சியாக இன்று பென்னாகரம் இந்தியன் வங்கி அருகே ஒகேனக்கல் பிரதான சாலையில் அமைந்துள்ள கல்வெட்டில் அடைப்புகள் ஏற்பட்டு இருந்ததை கண்டறிந்து ஜேசிபி எந்திரம் மூலம் மழைநீர் வடிகால் தூய்மை செய்யும் பணி துப்புரவு பணியாளர்கள், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உதவியுடன் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் விஜய், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா, நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் தமிழரசு, சாலை ஆய்வாளர் அருள்மணி, துப்புரவு பணி மேற்பார்வையாளர் உட்பட பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.